சமூக இடைவெளி ஒரு மீற்றரா ? இரண்டு மீற்றரா ? : இன்று கூடுகிறது தொழில்நுட்பக் குழு..! - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

சமூக இடைவெளி ஒரு மீற்றரா ? இரண்டு மீற்றரா ? : இன்று கூடுகிறது தொழில்நுட்பக் குழு..!

நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகம் என அண்மையில் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இரு நபர்களுக்கிடையிலான இடைவெளியாக ஒரு மீற்றரை பேணுவது போதுமானதா ? அல்லது அதனை 2 மீற்றராக அதிகரிப்பதா? என்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து தொழில்நுட்பக் குழு கூடி ஆராயவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்தக் குழுவின் கூட்டத்தின் பின்னர், சமூக இடைவெளியை பேணுவது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அடிக்கடி கைகளை தொற்று நீக்கும் திரவம் கொண்டு (Hand Sanitiser) கைகளை சுத்தப்படுத்துவது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment