இலங்கையிலிருந்து 43 பாகிஸ்தான் கைதிகள் நாடு கடத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

இலங்கையிலிருந்து 43 பாகிஸ்தான் கைதிகள் நாடு கடத்தப்பட்டனர்

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்காக இலங்கையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 43 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதிகள் சிறப்பு விமானம் மூலமாக பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்லாமபாத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மேல் நீதிமன்றின் உத்தரவின் கீழ் 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கைதிகளை அழைத்துச் செல்வதற்காக 86 பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருடன் சிறப்பு விமானம் நேற்று இரவு 10.50 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

பாகிஸ்தான் அழைத்துச் செல்லப்படும் இவர்கள் அந்நாட்டு நீதிமன்றின் உத்தரவின் கீழ் மீண்டும் பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் பாகிஸ்தானின் 86 பாதுகாப்பு படையினரின் உதவியுடன் இன்று காலை இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்லாமபாத் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தின் பல பஸ்களினூடாக இவர்கள் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கைதிகளின் வழக்கு கோப்புகளும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ் தானிகராலய அதிகாரிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

No comments:

Post a Comment