இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையில் புத்தளம் நகரில் முதலாவது கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புத்தளம் உடையார் வீதி வெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளதாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.
குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர். பரிசோதனை செய்த போதே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புத்தளம் நகரில் முதலாவது கொரோனா தொற்றாளியின் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த நிலையில் புத்தளம் நகர மக்கள் மாத்திரமின்றி, வெளிப்பிரதேசங்களில் இருந்து வருகை தரும் மக்களும் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் சுகாதார அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடிக்குமாறும் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment