முடிவுகளைப் பெற சற்று தாமதமாவதனால் உயிரிழப்புக்களை அறிவிப்பதில் கால தாமதம் என்கிறார் விசேட வைத்தியர் சுதத் சமரவீர - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

முடிவுகளைப் பெற சற்று தாமதமாவதனால் உயிரிழப்புக்களை அறிவிப்பதில் கால தாமதம் என்கிறார் விசேட வைத்தியர் சுதத் சமரவீர

(எம்.மனோசித்ரா) 

உயிரிழப்புகளின் பின்னர் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. மாதிரிகளைப் பெற்ற பின்னர் முடிவுகளைப் பெற்றுக் கொள்ள சற்று தாமதமாவதனால் உயிரிழப்புகள் தொடர்பில் அறிவிப்பதற்கும் கால தாமதமாகிறது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட 9 மரணங்களில் 4 மரணங்கள் அன்றைய தினம் ஏற்பட்டவையாகும். ஏனைய 5 மரணங்களில் நான்கு 20 ஆம் திகதியும் மற்றொன்று 19 ஆம் திகதி ஏற்பட்ட மரணமாகும்.

மரணங்கள் பதிவாகிய அன்றையதினமே அவை தொடர்பில் அறிவிக்க முடியாததால் அனைத்தையும் சேர்த்து வெளியிடும் போது மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைப் போன்று தென்படும்.

எவ்வாறிருப்பினும் நாட்டு மக்கள் அனைவரும் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். வீடுகளில் முதியோர் அல்லது நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானவர்கள் சமூகத்திற்கு வருவதை இயன்றளவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அறிவித்தல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமல்ல. முழு நாட்டுக்கும் பொறுத்தமானதாகும். குறிப்பாக அபாயம் மிக்க பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்திலுள்ள மக்கள் இதனை கடுமையாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment