நவீன தொழிநுட்பத்தினூடாக பொலிஸ் நடவடிக்கைகளை முன்னெடுக்க ரிந்துணர்வு உடன்படிக்கையினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

நவீன தொழிநுட்பத்தினூடாக பொலிஸ் நடவடிக்கைகளை முன்னெடுக்க ரிந்துணர்வு உடன்படிக்கையினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

(க.பிரசன்னா) 

நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி மிகவும் வினைத்திறனான பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இரு தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையினை மேற்கொள்வதற்கு நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எமது நாட்டின் பொலிஸ் உத்தியோகத்தர்களின் அறிவு, திறன், மனபாங்கு மற்றும் நவீன பொலிஸ் கடமைகள் தொடர்பாக சர்வதேச ரீதியான பிரயோகங்கள் மற்றும் பொறிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகவும் வினைத்திறனான பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இரு தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் பயங்கரவாத செயற்பாடுகள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள், ஆட்கடத்தல் வியாபாரம், நிதி மோசடி, சைபர் குற்றங்கள் போன்ற 17 துறைகளின் கீழ் பொலிஸ் ஒத்துழைப்பை நிறுவுவதற்காக வெளிநாட்டமைச்சின் வழிகாட்டலின் கீழ் வெளிநாட்டு பொலிஸ் நிறுவனங்களுடன் பொலிஸ் விடயதான அமைச்சின் மூலம் புரிந்தனர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad