ஏறாவூர் சுகாதார பிரிவில் முடக்கப்பட்டுள்ள சிறார்களுக்கு விளையாட்டுப் பொருட்களும் இனிப்புகளும் கதைப்புத்தகங்களும் விநியோகம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 16, 2020

ஏறாவூர் சுகாதார பிரிவில் முடக்கப்பட்டுள்ள சிறார்களுக்கு விளையாட்டுப் பொருட்களும் இனிப்புகளும் கதைப்புத்தகங்களும் விநியோகம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

கொரோனா வைரஸ் தொற்றொதுக்கலினால் முடக்கப்பட்டுள்ள குடும்பச் சிறார்களுக்கு விளையாட்டுப் பொருட்களும் இனிப்புகளும் வழங்கி அவர்களது உள நலன்களைக் காக்கும் மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர வர்த்தகர் சூ சங்கத் தலைவர் இஸற். ஏ. இனாயத்துல்லாஹ் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷாபிறா வஸீம் ஏறாவூர் நகர வர்த்தகர் நலன்புரிச் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த விளையாட்டுப் பொருட்களும் இனிப்புகளும் சுகாதாரத் துறையினரிடம் திங்கட்கிழமை 16.11.2020 கையளிக்கப்பட்டன.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷாபிறாவிடம் சுமார் 30000 ரூபாய் பெறுமதியான விளையாட்டுப் பொருட்களும் சொக்கலேற்கள் அடங்கிய இனிப்புக்களும் சிறுவர் கதைப் புத்தகங்களும் கையளிக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படுகின்ற அதேவேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்ப வீடுகளில் வாழும் சிறார்களின் உடல் உள நலன்களில் கவனம் செலுத்தவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது இதனையிட்டு சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் அக்கறை செலுத்த வேண்டும் என நிகழ்வில் உரையாற்றிய சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷ‪hபிறா தெரிவித்தார்.

ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத் தலைவர் இனாயத்துல்லாஹ் அதன் செயலாளர் ஏ.ஆர். முஹம்மத் ஆஷிக் பொருளாளர் எஸ்.எம். நழீம் நிருவாக உறுப்பினர் ரீ. இர்ஷாத் உட்பட நிதியுதவி வழங்கிய மருந்தக உரிமையாளர்களான எம். ஜிப்ரி ஏ.எம். அஸ்லம் ஆகியோரும் உதவிப் பொருட்கள் கையளிப்பு நிகழ்வில் கலந்து கொகாண்டனர்.

No comments:

Post a Comment