கட்டுக்குள் மினுவாங்கொடை கொரோனா கொத்தணி என்கிறார் இராணுவத் தளபதி - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

கட்டுக்குள் மினுவாங்கொடை கொரோனா கொத்தணி என்கிறார் இராணுவத் தளபதி

நாட்டில் இரண்டாவது கொரோனா அலையாக உருவெடுத்த மினுவாங்கொடை கொரோனா கொத்தணியை தற்போதைய நிலையில் முழுமையாக கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மினுவாங்கொடையில் ஆரம்பமான கொரோனா கொத்தணியில் சுமார் 3,106 தொற்றாளர்கள் வரை இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதில் 136 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். 

பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே குறித்த கொரோனா கொத்தணியை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad