கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளுக்கு இலவச வைத்திய நடமாடும் சேவை - News View

About Us

About Us

Breaking

Monday, November 16, 2020

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளுக்கு இலவச வைத்திய நடமாடும் சேவை

தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நலன் கருதி இலவச வைத்திய நடமாடும் சேவையினை கொழும்பு மாநகர சபையின் நோய் நிவாரணத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புக்களில் தொற்றா நோய்களின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி இலவச மருத்துவ நடமாடும் சேவையினை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை காலை 9 மணி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இவ்வாறு இலவச நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், க ழும்பு நகர் பகுதிக்கு உட்பட்ட மக்கள் தங்களது மருத்துவ பிரச்சினைகளை தொலைபேசி மூலமாக அழைத்து 24 மணி நேரமும் தீர்வினை பெற்றுக் கொள்ள முடியு மெனவும் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் சட்டத்தரணி ரோஹிணி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை கொழும்பு முகத்துவாரம் பகுதியிலுள்ள மெத்சத செவன தொடர்மாடி குடியிருப்பிலும், நாளை செவ்வாய்கிழமை முகத்துவாரம் மினிஜய செவன தொடர்மாடி குடியிருப்பிலும், நாளை மறுதினம் புதன்கிழமை முகத்துவாரம் ரண்மின செவன தொடர்மாடி குடியிருப்பிலும் இந்நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

19 ஆம் திகதி வியாழக்கிழமை புளுமெண்டால் பகுதியிலுள்ள சிறிசந்த உயனவிலும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாளிகாவத்தையிலுள்ள என்.எச்.எஸ். குடியிருப்பு தொகுதியிலும் 21 ஆம் திகதி சனிக்கிழமை முகத்துவாரத்திலுள்ள ரண்திய உயனவிலும் 23 ஆம் திகதி புளுமெண்டால் பகுதியிலுள்ள சிறிமுத்து உயனவிலும் 24 ஆம் திகதி தொட்டலங்கவிலுள்ள முவதொர உயனவிலும் முன் னெடுக்கப்படவுள்ளது.

25 ஆம் திகதி முகத்துவாரத்திலுள்ள சிறிசந்த செவன விலும் 26 ஆம் திகதி ரண்முத்து செவனவிலும் 27 ஆம் திகதி சத்ஹிரு செவனவிலும் 28 ஆம் திகதி லக்ஹிரு செவன விலும் குறித்த இலவச நடமாடும் சேவைகள் காலை 9 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment