தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Thursday, November 26, 2020

தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு - தயாசிறி ஜயசேகர

(இராஜதுரை ஹஷான்)

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டம் முழுமையாக செயற்படுத்தப்படுகிறது. இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருக்க வேண்டிய தேவை கிடையாது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும். சிறந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளன. பூகோளய மட்டத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. நெருக்கடியான நிலையில் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது.

நெருக்கடி நிலையினை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து வெற்றி கொள்ள வேண்டும். சுதந்திர கட்சி அரசாங்கத்துடன் என்றும் இணக்கமாக செயற்படும்.

அரசாங்கம் ஆட்சியமைத்த வேளையில் இருந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கம் அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்தியுள்ளது.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டம் முழுமையாக தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு.

கடந்த அரசாங்கம் இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருந்த்தால் தேசிய உற்பத்திகள் வீழ்ச்சியடைந்தன. இந்நிலைமை தற்போது முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு. 2024 ஆம் ஆண்டுக்குள் 10 தானியங்கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டு உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment