ஈரானில் மூத்த அணு விஞ்ஞானி துப்பாக்கிச் சூட்டில் படுகொலை - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

ஈரானில் மூத்த அணு விஞ்ஞானி துப்பாக்கிச் சூட்டில் படுகொலை

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே. ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் சூத்திரதாரி என்று மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் அவரை கருதுகின்றன. 

அவர் "ஈரான் அணு குண்டின் தந்தை" என்று வர்ணிக்கப்பட்டார்.

மொஹ்சென் பக்ரிசாதே தலைநகர் தெஹ்ரான் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் வெடி குண்டு மூலம் குறி வைக்கப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த பக்ரிசாதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஈரான் உற்பத்தி செய்யும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்திருப்பது குறித்த புதிய கவலையின் மத்தியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. 

செறிவூட்டப்பட்ட யுரேனியம் சிவில் அணு மின் உற்பத்தி மற்றும் இராணுவ அணு ஆயுதங்கள் இரண்டிற்கும் ஒரு முக்கிய அங்கமாகும்.

ஈரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று ஈரான் வலியுறுத்தி வந்தது.

2010 மற்றும் 2012 க்கு இடையில் நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் கொலைகளுக்கு இஸ்ரேல் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியது. 

மே 2018 இல் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த விளக்கத்தில் பக்ரிசாதேவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment