விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாளை முகநூலில் பதிவிட்ட நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாளை முகநூலில் பதிவிட்ட நால்வர் கைது

விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாள் குறித்து முகநூலில் பதிவு செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட நால்வர் ஏறாவூரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவரை முகநூலில் கௌரவித்த நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுக்கு ஏற்கனவே இது குறித்து அறிவுறுத்தியுள்ளதாகவும் யுத்தத்தின் போது சிங்களவர்கள், தமிழர்கள் பலர் கொல்லப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நால்வருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment