ஷங்கிரி லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர் எவ்வாறான குணாதிசயம் உள்ளவர்? - ஆணைக்குழு முன்னிலையில் உளவியல் நிபுணர் சாட்சியம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

ஷங்கிரி லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர் எவ்வாறான குணாதிசயம் உள்ளவர்? - ஆணைக்குழு முன்னிலையில் உளவியல் நிபுணர் சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஷங்கிரி லா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரே மிகவும் நிதானமானவர் பதட்டப்படாதவர் என உளவியல் கிசிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட பின்னர் வைத்தியர் நெய்ல் பெர்ணான்டோ இதனை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

ஷங்கிரி லா ஹோட்டலில் சஹ்ரான் ஹாசிமுடன் இணைந்து தாக்குதலை மேற்கொண்ட இல்ஹாம் அஹமட் இப்ராஹிம் குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஹாசிம் தன்னை வெடிக்க வைத்து சில நிமிடங்களின் பின்னரே இல்ஹாம் தன்னை வெடிக்க வைத்தார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள நெய்ல் பெர்ணான்டோ தனது சகா உயிருடன் இல்லை என்பதை அறிந்த நிலையிலும் இல்ஹாம் தாக்குதலை துல்லியமாக மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த நிலைமையிலும் அவர் தனது நடவடிக்கை குறித்தும் மிகவும் கவனத்துடன் காணப்பட்டார், பொதுமக்கள் ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்கு பயன்படுத்திய லிப்டிற்கு அருகில் தாக்குதலை மேற்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடையில் தனது வீட்டில் தன்னை வெடிக்க வைத்த இல்ஹாமின் மனைவி பாத்திமா ஜிவ்ரி எவ்வாறானவர் என ஆணையாளர்கள் உளவியல் சிகிச்சை நிபுணரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த நிலைமையை தெளிவுபடுத்தியுள்ள நெய்ல் பெர்ணான்டோ பாத்திமா நம்பிக்கையற்ற நிலையில் காணப்பட்டிருக்க வேண்டும், தன்னால் அந்த சூழ்நிலையிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்திருக்க வேண்டும் தன்னையும் குழந்தைகளுடன் சேர்த்து வெடிக்க வைப்பதுதான் ஒரேயொரு வழி என அவர் கருதியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவரின் நிலையை முழுமையாக அறிய வேண்டும் என்றால் உளவியல் மரண விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

No comments:

Post a Comment