குயில்வத்தையில் 19 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

குயில்வத்தையில் 19 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

அட்டன் கல்வி வலயம் குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தர மாணவர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புடைய 19 மாணவர்களை சுயதனிமைப்படுத்தியுள்ளதாக அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

நேற்று (26) குறித்த பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் மாத்தறை சுயதனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று (27), தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவரோடு தொடர்பிலிருந்து 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிபர், பாடசாலை நிர்வாகத்தினருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை குறித்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் 30 பேரில் நான்கு பேர் மாத்திரமே பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

மேலும் இங்கு கல்வி பயிலும் 406 மாணவர்களில் ஒருவர் கூட இன்று பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என்பதுடன் பாடசாலை வளாகம், வகுப்பறைகள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment