பிரதமரின் வேண்டுகோளின் பிரகாரம் கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க சாய்ந்தமருதில் விசேட துஆ பிராத்தனை - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

பிரதமரின் வேண்டுகோளின் பிரகாரம் கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க சாய்ந்தமருதில் விசேட துஆ பிராத்தனை

(நூருல் ஹுதா உமர்)

புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கொரோனா தொற்றிலிருந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டி நாடுமுழுவதும் மத அனுஷ்டானங்கள் நடைபெற்று வருகின்றது. 

அதன் ஒரு அங்கமாக சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனையும் மார்க்க சொற்பொழிவும் நேற்று (08) மாலை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனிபாவின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் உலமாக்கள், அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் சக்கி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராஸிக், ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், பிரபல உயிரியல் பாட ஆசிரியர் றிசாத் ஷரிஃப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள், தே. கா முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். அஜ்வத், பொதுச்சுகாதர பரிசோதகர்கள், குறிப்பிட்ட அளவிலான பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் மார்க்க சொற்பொழிவை தாருஸபா பிரதானி மௌலவி சபா முஹம்மத் (நஜாஹி) அவர்களும் விசேட துஆ பிரத்தனையையை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் மெளலவி எம்.ஐ. ஆதம்பாபா (ரஸாதி) அவர்களும் நிகழ்த்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad