ஏறாவூரைச் சேர்ந்த மேலதிக மாவட்ட பதிவாளர் ஸக்கரியா ஓய்வு பெற்றார் - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

ஏறாவூரைச் சேர்ந்த மேலதிக மாவட்ட பதிவாளர் ஸக்கரியா ஓய்வு பெற்றார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மேலதிக மாவட்ட பதிவாளராக சேவையாற்றி வந்த ஏறாவூரைச் சேர்ந்த ஆதம்பாவா ஸக்கரியா தனது பணியிலிருந்து திங்களன்று 09.11.2020 ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் மட்டக்களப்பு காணிப் பதிவகத்தில் 1987 ஜனவரி 02ஆம் திகதி முகாமைத்துவ உதவியாளராக முதல் நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து கொழும்பு மாளிகாவத்தை மத்திய பதிவேட்டறையிலும் பின்னர் மட்டக்களப்பு கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயக அலுவலகத்திலும் கடமையாற்றியுள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் மட்டக்களப்பு காணிப் பதிவகத்தில் காணி பதிவாளராகவும், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

இறுதியாக ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக சுமார் 26 வருடங்கள் கடமையாற்றி தற்சமயம் ஓய்வு பெற்றுள்ளார்.

சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்ட இவர் ஏறாவூர் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவராகவும் ஏறாவூர் வரலாற்று ஆய்வு மைய உறுப்பினராகவும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினராகவும் ஏறாவூர் சிவிவ் சமூக அமைப்பின் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியுள்ளார்.

இவரே மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலில் நியமனம் பெற்ற முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பதிவாயளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad