திருகோணமலையில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

திருகோணமலையில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் பலி

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சைக்கிளொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்திற்குள்ளானதில், சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.  இவ்விபத்து நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளது.

கந்தளாய், பேராற்றுவெளியைச் சேர்ந்த முகம்மட் நஜீப் (52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கந்தளாய் நகரிலிருந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்ற இவர், வீதியை கடக்க முற்பட்டபோது, வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும், இதில் காயமடைந்த இவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இவ்விபத்தை ஏற்படுத்தியவரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(கந்தளாய் நிருபர் - எப். முபாரக்)

No comments:

Post a Comment