90 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

90 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

(செ.தேன்மொழி)

அநுராதபுரம் பகுதியில் 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அநுராதபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை கலால் திணைக்களத்தினரும் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கலால் திணைக்களத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வலஸ்முல்ல பகுதிக்கு இந்த கேரளா கஞ்சாவை ஏற்றி வந்து கொண்டிருந்த போதே கலால் திணைக்களத்தினர் அதனை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது சொகுசு ஜீப் வண்டியில் வந்துள்ள சந்தேக நபர் அதனை மகவும் சூட்சுமுகமான முறையில் குறித்த ஜீப் வண்டியுல் மறைத்து எடுத்துவந்துள்ளதுடன், இதனை சோதனை செய்த கலால் திணைக்களத்தினர் அதிலிருந்து 30 கிலோ கிராம் கேரள கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரை செவ்வாய்கிழமை அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ள கலால் திணைக்களத்தினர், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad