ஊஞ்சல் கயிற்றில் சிக்கி 7 வயதுச் சிறுமி மரணம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 13, 2020

ஊஞ்சல் கயிற்றில் சிக்கி 7 வயதுச் சிறுமி மரணம்

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் கழுத்து இறுக்கிய நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், கோயில் வீதியைச் சேர்ந்த சென். ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தில் கல்வி கற்கும் உயிந்தன் சாதுரியா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 3ஆம் திகதி இச்சிறுமி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கொழுவி இருந்த ஊஞ்சல் கயிற்றினை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார். ஊஞ்சலில் போடப்பட்டிருந்த முடிச்சினை அவிழ்க்க முற்பட்ட வேளையில் கதிரையிலிருந்து விழுந்தபோது, கயிறு கழுத்தில் சிக்குண்டுள்ளது.

வெளியில் வந்த தாயார் மகள் கயிற்றில் தொங்கிக் கொண்டு இருப்பதனைக் கண்டு அவரை மீட்டு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளார். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இச்சிறுமி நேற்று (12) உயிரிழந்துள்ளார்.

(ஐங்கரன் சிவசாந்தன்)

No comments:

Post a Comment