வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 63 பெண் கைதிகளும், 8 ஆண் கைதிகளும் ஒரு சமையல்காரரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 72 பேரையும் வெலிக்கந்தை கொவிட்-19 வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறையிலிருந்த 30 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதாகவும், இதில் ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா சாதியாவுக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை நேற்றையதினம் (07) போகம்பறை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad