போகம்பரை சிறைக்கும் பரவியது கொரோனா - ஏழு கைதிகள் அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 7, 2020

போகம்பரை சிறைக்கும் பரவியது கொரோனா - ஏழு கைதிகள் அடையாளம்

வெலிக்கடைச் சிறைச்சாலையைத் தொடர்ந்து போகம்பறை சிறைச்சாலைக்குள்ளும் கொரோனா பரவியிருப்பது இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு தொற்று அடையாளம் காணப்பட்ட 7 கைதிகளும், அங்கிருந்து வெலிக்கந்தை கொவிட்-19 வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக, அதிலிருந்து கைதிகள் சிலர் பழைய போகம்பறை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

அந்த வகையில், இவ்வாறு மாற்றப்பட்ட ஒரு சில கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment