கொரோனா 2ஆம் அலை தொடர்பான அரசின் சுற்றுநிருபத்தினை மட்டக்களப்பிலுள்ள திணைக்களங்கள் புறக்கணிக்கின்றதா? - மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

கொரோனா 2ஆம் அலை தொடர்பான அரசின் சுற்றுநிருபத்தினை மட்டக்களப்பிலுள்ள திணைக்களங்கள் புறக்கணிக்கின்றதா? - மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

கொரோனா வைரஸ் 2ஆம் அலை தொடர்பான அரசின் சுற்றுநிருபத்தினை மட்டக்களப்பிலுள்ள சில திணைக்களங்கள் புறக்கணிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த விடயத்தைப் பற்றி தனது கவனத்திற்குக் கொண்டு வருமாறு மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட தகவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் அரச திணைக்களங்களில் கடமைபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையினை குறைத்து வீட்டிலிருந்தவாறே வேலை செய்வதற்கேற்ற வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க திணைக்களத் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலாளரினால் சுற்றுநிருபம் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சகல திணைக்களங்களுக்கும் இச்சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் உடனடியாக இது அமுலுக்கு வருகின்றது.

கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்திலும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் மட்டக்களப்பில் சில திணைக்களங்களில் இந்நடைமுறை பின்னபற்றப்படாமல் சகல உத்தியோகத்தர்களும் முழுநேரக் கடமைபுரியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

மேலும் தூர இடங்களில் இருந்தும், பொதுப் போக்கு வரத்துகள் மூலம் கடமைக்கு வருபவர்களும், கரப்பிணிப் பெண்களும் இவ்வாறான சூழ்நிலையில் முழுநேரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையானது கொரோனா பரவலினைத் தடுக்கும் செயற்பாடாகுமா என கேள்வி எழுப்பப்ட்டுள்ளது.

எனவே திணைக்களத் தலைவர்கள் இது தொடர்பில் கவனஞ்செலுத்தி ஜனாதிபதி செயலாளரின் சுற்றுநிருபத்திற்கமைவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment