26 கல்வி மாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கினார் ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 26, 2020

26 கல்வி மாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கினார் ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில்

ஊவா மாகாண கல்வி அமைச்சுக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 26 கல்வி மாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் (26-11-2020) ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கொழும்பு, களனி மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகங்களில் கல்விமாணிப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் மற்றும் துறவிகள் இருவருக்கு ஆசிரியர் நியமனக் கடிதங்கள் ஆளுநர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் மொனராகலை, பிபிலை, வெல்லவாய, தமல்வில, வெலிமட, பஸ்ஸரை, மஹியங்களை மற்றும் வியலுவ ஆகிய கல்வி வலையங்களில் காணப்படும் பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஊவா மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் விஜித மல்லேஹேவா, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்தன, ஊவா மாகாண கலவி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வல உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment