இலங்கையில் 24 மணித்தியாலத்திள் 382 தொற்றாளர்கள் - 10,713 PCR பரிசோதனைகள் - வெளிநாடுகளிலிருந்து 85 பேர் வருகை - 3,281 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

இலங்கையில் 24 மணித்தியாலத்திள் 382 தொற்றாளர்கள் - 10,713 PCR பரிசோதனைகள் - வெளிநாடுகளிலிருந்து 85 பேர் வருகை - 3,281 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

இன்று (17) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 382 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 08 பேர் கப்பல் ஊழியர்கள் (05 பேர் உள்நாடு, 03 பேர் வெளிநாடு) ஏனைய 374 பேரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளவர்களாவர். 

குறித்த தொற்றாளர்களில் 231 பேர் கொழும்பு மாவட்டம், 42 பேர் கம்பஹா மாவட்டம் மற்றும் 20 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று கொவிட் மையம் தெரவித்துள்ளது.

இன்று (17) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,154 பேர் ஆகும். 

அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 3,106 பேரும் மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் 11,048 பேரும் உள்ளடங்குவர். 

இன்று (17) காலை வரை தொற்றாளர்களில் மொத்தம் 8,381 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம், 16 ஆம் திகதி வரை நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,668. அதில் 11,805 பேர் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஏனைய 5,802 பேர் தற்பொழுதும் சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த எண்ணிக்கை 61 ஆகும். 

மேலும் இன்று காலை வரையான கடந்த 24 மணி நேரத்திற்குள் கொவிட்-19 தொற்று காரணமாக மூவர் மரணமாகியுள்ளனர் என பதிவாகியுள்ளது. அவர்கள் கொழும்பு -10, கொழும்பு-13, மற்றும் மொரட்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 

அதன்படி முழுமையாக சுகமடைந்த 311 பேர் வைத்தியசாலைகளில் இருந்து (கடந்த 24 மணி நேரத்திற்குள்) இன்று காலை (17) 06.00 மணியளவில் வெளியேறியுள்ளனர்.

இன்று (17) காலை டுபாயில் இருந்து EY 264 விமானம் ஊடாக 26 பயணிகளும், டோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 37 பயணிகளும், டோஹா கட்டாரில் இருந்து QR UL 218 விமானம் ஊடாக 22 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுடள்ளனர்.

இன்று காலை (17) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 33 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,281 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 16 ம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 10,713 ஆகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad