கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை - சுகாதார அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை - சுகாதார அமைச்சு

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் தற்போதைய நடைமுறையில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜெயரூவான் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மண்ணின் நிலைமை மற்றும் கொரோனா வைரசின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப காரணங்களை கருத்திலெடுத்த பின்னரே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உடல்களை தகனம் செய்யும் முடிவை எடுத்தார் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் அதனை மாற்றுவதற்கான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அனைவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் இலங்கையை பாரிய பேரிடரை தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் பல தற்கொலைகள் இடம்பெறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் கொவிட் 19 குறித்து அச்சப்படதேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment