மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை : ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் - இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 26, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை : ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் - இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு எந்த வேலைத் திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான எமது அரசாங்கத்தில் பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று கடந்த காலங்களிலும் எமது அரசாங்கமே வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்ற வேலைத் திட்டங்களால் பல அபிவிருத்திகளை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மேற்கொண்டன. 

அத்துடன் ஏப்ரல் தாக்குதல் மற்றும் கொராேனா தொற்று போன்ற காரணங்களால் உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. எமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையிலும் மிகவும் நெருக்கடிக்கு மத்தியில் சிறந்ததொரு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. 

எனது அமைச்சு கமத்தொழில் அமைச்சுக்கு கீழே இருக்கின்றது. எனது அமைச்சின் கீழும் விவசாய வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேலைத் திட்டம் ஒன்றை தயாரித்திருக்கின்றோம்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் 4 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை க்கொண்டு வந்து தொழில்பேட்டை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருக்கின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கடந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு தொழிற்சாலையையேனும் திறக்கவில்லை. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர் வரை தொழில் புரிந்து வந்தனர். அதனைக்கூட அவர்களால் மீள ஆரம்பிக்க முடியாமல் போனது. ஆனால் எமது அரசாங்கம் அதனை ஆரம்பித்திருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment