யாழில் உள்ள 14 வீதிகளை காப்பெற் வீதியாக மாற்றும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Sunday, November 29, 2020

யாழில் உள்ள 14 வீதிகளை காப்பெற் வீதியாக மாற்றும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின்  செயற்திறன்மிக்க தலைமையின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் மூலம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற விஷேட ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக கிராமிய வீதிகளை காப்பெற் வீதியாக மாற்றும் சிறப்பு வாய்ந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் நேரடி சிபாரிசில் யாழ் மாவட்டத்தில் உள்ள “ஒவ்வொரு உள்ளூராட்சி தொகுதிகளுக்கும் ஒரு வீதி” என்ற வீதம் இன்று (29) யாழ் மாவட்டத்தில் 14 வீதிகள் காப்பெற் வீதியாக மாற்றும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரும் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளருமான சதாசிவம் இராமநாதனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அந்த வகையில் இன்று காலை நல்லூர் மாநகர சபை எல்லைக்குட்பட்ட 2 கிலோ மீட்டர் நீளமான மூத்தவிநாயகர் வீதியை காப்பெற் வீதியாக மாற்றும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட பொறியாளர், யாழ் மாநகர சபை ஆணையாளர், நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர், J/109 கிராமசேவகர், J/109 அபிவிருத்தி உத்தியோகத்தர், மாநகர சபை உறுப்பினர்கள், முத்தவிநாயகர் சனசமூக நிலைய உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள் என கோவிட்-19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad