விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

வடக்கு - மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் சாட், கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளது. 

இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவமும், அரசு ஆதரவு பெற்ற குழுக்களும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அரசு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

அரசுப்படையினருக்கு ஆதரவாக இருப்பதாவும், ரகசிய தகவல்கள் அனுப்புவதாகவும் கூறி அப்பாவி பொதுமக்கள் மீது போகோ ஹாரம் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் மைடுரூகி மாகாணத்தில் கோஷோபி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று (28) 110 க்கும் அதிகமான தொழிலாளர்கள் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்குவந்த போகோ ஹாரம் பயங்கரவாதிகள் விவசாய வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை சிறை பிடித்தனர். 

மேலும், அவர்களின் 110 பேரின் கைகால்களை கட்டிய பயங்கரவாதிகள் அவர்களை கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்தனர். மேலும், சிலரை கடத்தி சென்றனர். 

இந்த சம்பவம் குறித்து அரசு ஆதரவு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போகோ ஹாரம் பயங்கரவாதிகளின் இந்த கொடூர கொலைகளுக்கு நைஜீரிய ஜனாதிபதி முகம்மது புஹாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment