எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் மேலெழுந்தவாரியாக நேற்று (27) வெள்ளிக்கிழமை 142 நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வகையில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் ஓட்டமாவடி பொதுச்சந்தை என்பவற்றில் 93 நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றது.
அத்தோடு, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் 59 நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றது.
இதன்போது மீன், மரக்கறி, பழ, இறைச்சி வியாபாரிகள், சில்லறைக்கடை உரிமையாளர்கள், தம்புள்ளை பகுதிக்கு மரக்கறி கொள்வனவுக்கு சென்று வந்தவர்கள், பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்ட பொதுமக்கள், சமூக மட்டத்தலைவர்கள் ஆகியோரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகளில் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment