ட்ரோன் கமெராக்கள் கண்காணிப்பு உதவியால் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெறும் பயணங்களைக் கண்காணிக்க விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் கெமராக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கொழும்பு, முகத்துவாரம் மற்றும் கல்கிஸ்ஸை பகுதியில் ட்ரோன் கெமராக்களில் கண்காணிக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானப் படையுடன் இணைந்து பொலிஸ் சிறப்பு பணிக்குழு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக நேற்றையதினம் 15 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment