பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர்களில் 10 பேர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனால் சுமார் 400 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில், இதுவரை சுமார் 35,000 இற்கு மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment