MT New Diamond கப்பலின் மாலுமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

MT New Diamond கப்பலின் மாலுமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

இலங்கையை அண்டிய கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளாகிய MT New Diamond கப்பலின் மாலுமிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சந்தேகநபராக கருதப்படும் கிரேக்கத்தைச் சேர்ந்த திரோஷ் ஹிலியாஸ் என்பவர், கப்பலில் தீ பரவிய வேளையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த மாலுமி வெளிநாட்டிற்கு பயணிக்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு, கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹாரினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

அத்தோடு, விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும், வசிக்கும் இடம் மாறினால் அது தொடர்பில் நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும் குறித்த கப்பல் மாலுமிக்கு நீதிபதியினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

கிழக்கு கடற்பரப்பில் சங்கமன்கண்டியில் 38 கடல் மைல் தொலைவில் டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஏற்றிவந்த MT New Diamond கப்பல் கடந்த செப்டெம்பர் 3ஆம் திகதி விபத்திற்குள்ளாகியிருந்தது.

No comments:

Post a Comment