பாராளுமன்ற பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாராளுமன்ற அமர்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் வழங்கிய பதில் இந்த செய்திக்கு அடிப்படையாக காணப்படுகின்றது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள பாராளுமன்ற விவகார பிரிவின் பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ளதால் நேற்றைய தினம் குறித்த அலுவலகத்துக்குள் பிரவேசிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனையவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் இங்கு சுட்டிக்காட்டினார்.
எனவே பாராளுமன்ற பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா ஏற்பட்டிருப்பதாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment