மினுவாங்கொடை பொலிஸ் நிலைய சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பொலிஸ் நிலையத்தின் சகல அதிகாரிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த கொவிட்-19 தொற்றாளரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரது மகன், Brandix தொழிற்சாலையில் பணியாற்றுபவர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவருக்கு கொரோனா தொற்றுள்ளதாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment