'ஹட்டனில் கொரோனா தொற்றாளருக்கு சிகிச்சையளித்த வைத்தியருக்கு தொற்றில்லை' : பி.சி.ஆர். அறிக்கையில் உறுதி - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

'ஹட்டனில் கொரோனா தொற்றாளருக்கு சிகிச்சையளித்த வைத்தியருக்கு தொற்றில்லை' : பி.சி.ஆர். அறிக்கையில் உறுதி

ஹட்டன் மீன் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியமையை அடுத்த, அவர் முன்னதாக சிகிச்சை பெறச் சென்ற வைத்தியருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டதில், அவருக்கு தொற்றில்லை என அறிக்கைகள் வெளிவந்துள்ளதாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வைத்தியரான அவரது மனைவிக்கும் தொற்றில்லை என அறிக்கைகள் உறுதிபடுத்தப்பட்டிருந்தாலும், அவரது குடும்பத்தினர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட குறித்த மீன் வர்த்தகர் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கடந்த வாரம் குறித்த வைத்தியரின் வீட்டுக்கு சென்று, மருந்துகளை பெற்றுள்ளார். 

குறித்த மருத்துவரும் அவரது மனைவியும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கடமையாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், மீன் வர்த்தகருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாக குறித்த வைத்தியரையும் அவரது மனைவியையும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்குட்படுத்தியதுடன், அவர் கடமை புரிந்த நாட்களில் இருந்தவர்கர்களின் விபரங்களையும் உடனடியாக சேகரித்தது. 

எனினும் அவர்கள் இருவருக்கும் தொற்று இல்லை என்ற அறிக்கையின் பின்னர், சுகாதார விதிகளுக்கமைய அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் வைத்தியரின் மனைவி பணிபுரியும் ஹட்டனில் அமைந்துள்ள அரசாங்க டிஸ்பென்சரியும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோர் எந்த பதற்றங்களுக்கும் உள்ளாக வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment