சட்ட திட்டங்களுக்குட்பட்டே பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் : டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

சட்ட திட்டங்களுக்குட்பட்டே பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் : டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறிவிப்பு

வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களையும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் சிபாரிசுகளுடன் வருபவர்களுக்கே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது என டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இது குறித்து வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில், பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களையும் விதிமுறைகளையும் நாம் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். 

எமது வைத்தியசாலைக்கு வௌிநோயாளர் சிகிச்சை பிரிவுக்கு வருவோர் அல்லது வைத்தியசாலைகளில் தங்கி கிகிச்சை பெறுவோருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பின் நாம் உடனடியாக அதை மேற்கொள்வோம்.

அதற்கு அடுத்ததாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்போடுதான் நாம் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 

தொற்று அறிகுறி இருக்கும் பட்சத்தில் மேற்படி சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் எமக்கு அறிவிப்பர். அதற்கு நாம் வைத்தியசாலையில் தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். 

பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் எமது சுகாதார உத்தியோகத்தருக்கு கட்டாயமாக இரண்டிலிருந்து மூன்று நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும்.

ஆகவே அதற்கேற்றவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் சவாலானது. எனினும் நாம் எம்மால் இயன்றளவுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். 

எனவே பொதுமக்கள் இது தொடர்பில் குழம்ப வேண்டியதில்லை. உங்களுக்கு காய்ச்சல் மற்றும் சளியுடன் கூடிய அறிகுறிகள் இருந்தால் உங்கள் பிரதேச பொது சுகாதார அதிகாரிக்கு முதலில் அறிவியுங்கள். 

ஏனென்றால் வீட்டிற்கே சென்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயம் தற்போது முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment