கொழும்பில் அத்தியவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

கொழும்பில் அத்தியவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

கொழும்பில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக இவை முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட செயலாளர் பிரதீக் யசரத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் PCR பரிசோதனைகள் உ ள்ளிட்ட COVID – 19 தொற்றுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய , சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீக் யசரத் குறிப்பிட்டுள்ளார்.

நடமாடும் வாகனங்கள் ஊடாக மக்களுக்கு தேவையான அத்தியசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இதனால் அந்தந்த பகுதி பொலிஸாருடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனை தவிர, தனிமைப்படுத்தப்பட்டவர்களில் வறிய குடும்பங்கள் இருப்பின் அவர்களுக்கு சலுகை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment