கொரோனா சமூக தொற்றாக இன்னும் மாறவில்லை - வயதானவர்கள், தொற்றா நோய்க்குள்ளானவர்களே அடையாளம் - கட்டுப்படுத்துவதில் எமது நாடு வலுவான நிலையில் உள்ளது : தொற்று நோயியல் பிரிவு - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

கொரோனா சமூக தொற்றாக இன்னும் மாறவில்லை - வயதானவர்கள், தொற்றா நோய்க்குள்ளானவர்களே அடையாளம் - கட்டுப்படுத்துவதில் எமது நாடு வலுவான நிலையில் உள்ளது : தொற்று நோயியல் பிரிவு

பொதுமக்கள் தமது பொறுப்பை உணர்ந்து இந்த சந்தர்ப்பத்தில் செயற்பட்டாலே கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தொற்று நோயியல் பிரிவின் பொறுப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். 

கொவிட்-19 வைரஸ் சமூக தொற்றாக இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் இன்று (26) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட வைத்தியர் இந்த விடயங்களை குறிப்பிட்டதுடன் வயதானவர்கள் அல்லது தொற்றா நோய்க்குள்ளானவர்கள் மத்தியிலேயே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

தொற்றா நோய் உள்ளவர்கள் விசேடமாக இதில் பாதுப்புடன் செய்றபட வேண்டும். இவ்வாறானவர்கள் வீடுகளில் இருப்பது தற்போதைய நிலையில் சிறந்தது. இவர்களுக்கு உள்ள நோய் நிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் இக்காலப்பகுதிக்குள் மிகவும் முக்கியமானதாகும்.

தொற்றா நோய் உள்ளர்கள் இருக்கும் வீடுகளில் உள்ள ஏனையோர் கொரோனா வைரஸ் தொற்றை வீட்டுக்குள் கொண்டுவராது இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா தொற்று நோயாளர் என்று அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர்களுக்கு வழங்கியுள்ள தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு உங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொடர்பில் விளக்கமளிப்போம்.

இதன்போது நோய் positive என்று இருந்தால் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வரையில் வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுரை வழங்குவோம்.

நோய் தொடர்பான அறிக்கை வந்தவுடன் அங்கு வாகன வசதிகள் இருக்க முடியாது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வைத்தியசாலையில் எந்த இடத்தில் அவரை அனுமதித்தல் மற்றும் கட்டில் வசதி உள்ளதா என்பதை அறிய வேண்டும்.

இப்படி கூறுவதன் மூலம் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு கட்டில் வசதி இல்லை என்பது அர்த்தமல்ல. தற்பொழுது வைத்தியசாலைகளில் 90.7 சதவீதமான அளவில் கட்டில்களிலேயே நோயாளர்கள் உள்ளனர். இன்னும் 10 சதவீதமான கட்டில் வசதிகள் உண்டு.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் எமது நாடு வலுவான நிலையில் உண்டு. சுகாதார துறையிலும் அவ்வாறே நோயாளர்களின் எண்ணிக்கை அதிரித்தால் அவர்களை கையாளக்கூடிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். அதற்கான ஆற்றல்கள் எமக்கு உண்டு. 

நோய் பரவும் பிரதேசங்கள் என்று அடையாம் காணப்படும் பிரதேசங்களில் விசேடமாக அனர்த்த நிலை பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை வரையறுப்பதும் முக்கியமானதாகும்.

இவ்வாறான பகுதிகளில் நிறுவனங்களை திறந்திருக்க முடியாது. இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது இருப்பதில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் நாம் பொதுமக்களுக்கு கூறுவது என்னவெனில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதே ஆகும்.

விருப்பத்திற்கு ஏற்ற ஆடைகளை தெரிவு செய்யும் தேவை இப்பொழுது இருக்கும் என்று நாம் நினைக்கவில்லை. இவற்றை தவிர்ப்பதே பொதுமக்களுக்கு நாம் வழங்கும் அறிவுரையாகும்.

மீனை உணவாக கொள்வதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற ரீதியில் பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை எனவும் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர கூறினார்.

மீனை முறையாக சமைத்து உண்ணும் போது கொவிட்-19 தொற்று பரவும் சாத்தியம் இல்லாமல் போகிறது. சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை முறையாக சேமித்து வைப்பதன் மூலமும், முறையாக துப்பரவு செய்வதன் மூலமும், சமைப்பதற்கு பயன்படுத்திய பாத்திரங்களை முறையாக கழுவுவதன் மூலமும் தொற்று ஏற்படும் சாத்தியம் இல்லாமல் போவதாக அவர் மேலும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment