விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தவறானது - இங்கிலாந்து நீதிமன்றம் 'அதிரடி' தீர்ப்பு! - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 21, 2020

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தவறானது - இங்கிலாந்து நீதிமன்றம் 'அதிரடி' தீர்ப்பு!

உலகளாவிய ரீதியில் 31 நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பை இன்று வழங்கி உள்ளது. 

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டமைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.

எனினும் இக்கடிதத்தை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் இக்கடிதத்தை நிராகரித்தார். இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தது.

இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் (Proscribed Organisations Appeal Commission) இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், புலிகள் இயக்கம் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நிரூபிக்க அதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு ஆணையம், விடுதலை புலிகள் இயக்கம் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என அதிரடி தீர்ப்பை வழங்கியது.

இது குறித்த மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் விடுதலை புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்த இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment