புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் - யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் - யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதி, தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதனடிப்படையில் புங்குடுதீவு பகுதியானது, இன்று காலையிலிருந்து தற்காலிக முடக்கத்திலிருந்து நீக்கப்பட்டு வழமைக்கு திரும்புகிறது.

எனினும், மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளினை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும், புங்குடுதீவுக்கு சென்றுவரும் பொது மக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் . குறித்த பகுதி, சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment