பெண் கிராம உத்தியோகத்தரிடம் பாலியல் சில்மிசம் - பிரதேச செயலாளர் கைதாகி பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

பெண் கிராம உத்தியோகத்தரிடம் பாலியல் சில்மிசம் - பிரதேச செயலாளர் கைதாகி பிணையில் விடுதலை

இளம் பெண் கிராம உத்தியோகத்தருக்கு, தொலைபேசி ஊடாக அறுவெறுக்கத்தக்க பாலியல் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியதாக கூறப்படும் கற்பிட்டி பிரதேச செயலாளர் நேற்று திங்கட்கிழமை (19) கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கீழ் கடமை புரியும் இளம் பெண் கிராம சேவகர் ஒருவருடன் கடந்த 4ஆம் திகதி தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்படி அறுவெறுக்கத்தக்க வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியதாக குறித்த பெண் கிராம உத்தியோகத்தர் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே அவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கற்பிட்டி பிரதேச செயலாளர், புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு புத்தளம் மாவட்டச் செயலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் புத்தளம் மாவட்ட உப தலைவர் திலங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

மேற்படி சம்பவம் தொடர்பில் குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் பணிப்பகிஷ்பை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment