மட்டக்களப்பில் சினிமா திரையரங்குகள், இசை நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள், சிறுவர் பூங்காக்கள், தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 7, 2020

மட்டக்களப்பில் சினிமா திரையரங்குகள், இசை நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள், சிறுவர் பூங்காக்கள், தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு பணிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

நாட்டில் தற்சமயம் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வண்ணம் மட்டக்களப்பில் சினிமா திரையரங்குகள், இசை நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள், சிறுவர் பூங்காக்கள், தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் புதன்கிழமை 07.10.2020 மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.

மேலதி அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அச்சுதன், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஐயசேன, இராணவ அதிகாரிகள், வைத்திய அத்தியட்சகர்கள், உள்ளுராட்சி அதிகாரிகள் என உயர்மட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைபற்றிய தங்களது முன்னெடுப்புக்களை தெரிவித்தனர்.‪ 

கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்க திணைக்களங்கள் செயல்பட்டதைப்போன்று தொடர்ந்தும் சகலரதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

இடங்களில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும். 

பொதுப் போக்கு வரத்துக்களை கடுமையான கண்காணிப்பதற்காக பொலிஸ் இராணுவத்தினருடன் சுகாதாரப் பிரிவினரும் கடமையில் ஈடுபடவுள்ளனர். 

சந்தைகள் வர்த்தக நிலையங்களில் ஆள் இடைவெளி பேணப்படுவதுடன் முகக் கவசங்கள் அணிந்த நிலையில் கை கழுவுதலும் இடம்பெற வேண்டும். 

பொதுமக்கள் தேவையின்றி தங்களின் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை இனிமேல் ஒருவர் மாத்திரமே பார்வையிடுவதற்கு பாஸ் வழங்குதல் வேண்டும்.

இந்த விழிப்பு முன்னாயத்த அறிவித்தல்களை ஒலி பெருக்கியூடாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானமும் அதிகாரிகள் மட்டக்கூட்டத்தில் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment