நீதவானின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசிய இருவருக்கு விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

நீதவானின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசிய இருவருக்கு விளக்கமறியல்

கடுவெல பதில் நீதவான் ஹேமபால ஏக்கநாயக்கவின் கொத்தலாவல விஹாரை வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்திய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யயப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (14) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதவான் ஹேமபால ஏக்கநாயக்க தனது மனைவி பிள்ளைகளுடன் இரவில் வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

எனினும் அதிஷ்டவசமாக அந்த பெற்றோல் குண்டு வெடிக்காமையால் எந்தவித உயிர் ஆபத்துகளும் இடம்பெறவில்லை என விசாரணைகளை மேற்கொள்ளும் நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கொழும்பு தெமட்டகொட பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் தலங்கம மற்றும் நவகமுவ பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

நீதவான் ஹேமபால ஏக்கநாயக்கவின் மனைவி அரச நிறுவனம் ஒன்றில் சட்ட அதிகாரியாக பணி புரிகின்றார். அவருடன் ஏற்பட்ட முறுகல் நிலைமையின் காரணமாகவே நீதவான் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நவகமுவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad