பூச்சாடிக்குள் கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

பூச்சாடிக்குள் கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது

யாழ் வடமாராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மிகவும் இரகசியமாக கஞ்சா செடிகள் வளர்த்த நபர் ஒருவரை பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக பளை பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து நேற்றைய தினம் 17-10-2020 குறித்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது வீடு ஒன்றில் பூச்சாடியில் சூட்சுமமான முறையில் 15-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை மறைத்து வைத்து வளர்த்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad