சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடன் உழவு இயந்திரம் மீட்பு - கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடன் உழவு இயந்திரம் மீட்பு - கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

கிளிநொச்சி - தர்மக்கேணி பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடன் உழவு இயந்திரமொன்று பளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தர்மக்கேணி பகுதியில் சட்டவிரோத முறையில் மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அப்பகுதியில் அவர்கள் சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, வேம்பு மற்றும் நாவல் மரக்குற்றிகள் அறுக்கப்பட்டு, உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றப்பட்டு கொண்டிருப்பதை அவதானித்த பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.

இதனை கண்ட சந்தேகநபர்கள் மரக்குற்றிகள் மற்றும் உழவு இயந்திரத்தை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உழவு இயந்திரம் மற்றும் மரக்கட்டைகளை பளை பொலிஸார் மீட்டு வந்துள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad