பஸ்களில் பயணம் செய்வோருக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

பஸ்களில் பயணம் செய்வோருக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

தனியார் அல்லது அரச பஸ்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பஸ்ஸுன் இலக்கத்தை கவனத்திற் கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

அதற்கு அமைவாக பயணிகள் அவதானிக்க கூடிய வகையில் பஸ்களின் இலக்கங்களை காட்சிப்படுத்துமாறும் சகல பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

பேலியகொடை கொத்தணியின் பின்னர், பலர் பஸ்களில் பயணம் மேற்கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும், தாங்கள் பயணித்த பஸ்கள் எவை என்பதை அடையாளப்படுத்துவதற்காக அதன் இலக்கங்களை அவர்களினால் நினைவுபடுத்திக் கூற முடியாத நிலைமை உள்ளது. 

ஆகவேதான், அரச மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதன் மூலம் பஸ்களில் பயணிக்கும் பயணிகள், தாங்கள் பயணித்த பஸ்களின் இலக்கங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

குறித்த பஸ்களில், கொவிட்-19 நோயாளர் ஒருவர் பயணித்திருந்தால், அந்தப் பஸ்ஸில் பயணித்த ஏனையவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அறிவித்தல்களை வழங்க தங்களுக்கு இலகுவானதாக இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment