காத்தான்குடியில் 27 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

காத்தான்குடியில் 27 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை (27.10.2020) காலை 27 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேலியகொட மீன்சந்தை கொரோனா தொற்றுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட வாழச்சேனையைச் சேர்ந்த மீனவர்களுடன் தொடர்பாளர்களாக காணப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட கொரோனா தொற்றுக்குள்ளான மாவட்டங்களில் இருந்து காத்தான்குடிக்கு வந்து சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய சுய தனிமைப்படுத்தலில் இருந்த 27 பேருக்கே இந்த பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல். நசிர்தீன், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசன் ஆகியோர் முன்னிலையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.பசீர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் இவர்களிடமிருந்து பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றுக் கொண்டனர்.

இந்த மாதிரிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாக காத்தான்குடி சுகாதார அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்போது காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர் உட்பட பொலிசாரும் சமூகமளித்திருந்தனர்.

No comments:

Post a Comment