மட்டக்களப்பில் புலிகளின் வெடி பொருட்களை நிலத்தை தோண்டி தேடிய பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

மட்டக்களப்பில் புலிகளின் வெடி பொருட்களை நிலத்தை தோண்டி தேடிய பொலிஸார்

மட்டக்களப்பு நவகிரி பாடசாலை வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெடி பொருட்களை தேடி பொலிஸார் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையில் எவையும் மீட்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் 37ஆம் கிராம நவகிரி பாடசாலை வளாகம் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது முகாமாக செயற்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த பகுதியில் நிலத்தில் வெடி பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அதனை தோண்டி சோதனையிட நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.

இதற்கமைய களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் பெறப்பட்ட கட்டளைக்கு அமைவாக தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினரின் பங்குபற்றுதலுடன் வெல்லாவெளி பொலிசார் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கை நேற்று மாலை வரை இடம்பெற்றபோதும் எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில், அகழ்வு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment