பாணந்துறை வடக்கு, ஹேனமுல்ல சந்தியில் அதிவேக மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், பாணந்துறை வடக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி காயமடைந்துள்ளார். இவ்விபத்து இன்று (15) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் இடம்பெறுவதாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த இடத்திற்கு பொலிஸ் பொறுப்பதிகாரி சென்றிருந்தார்.
இதன்போது, பொலிஸ் ஜீப் வண்டியை வீதியில் நிறுத்தி விட்டு, முன்னோக்கி சென்ற பொலிஸ் பொறுப்பதிகாரி மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியதோடு, மற்றுமொரு மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பொலிஸ் ஜீப் வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment