நாடு முழுவதும் திரையரங்குகளுக்கு பூட்டு - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

நாடு முழுவதும் திரையரங்குகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியிலுள்ள திரையரங்குகளை தற்காலிகமாக மூடுவதற்கு இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, அனைத்து திரையரங்குகளையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று (15) அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் கொவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad