அணைக்கு மேலால் விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்தது எத்தியோப்பியா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

அணைக்கு மேலால் விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்தது எத்தியோப்பியா

நைல் நதியில் கட்டப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய பாரிய அணைக்கு மேலால் விமானங்கள் பறப்பதற்கு எத்தியோப்பியா தடை விதித்துள்ளது.

4.8 பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த அணை நாட்டின் பொருளாதாரத்திற்கு தீர்க்கமானதாக எத்தியோப்பியா கருதுகிறது.

இந்த அணை தொடர்பில் எகிப்து மற்றும் சூடான் அதிருப்தியில் உள்ளன. இதனால் தமது நாட்டின் நைல் நதி நீரோட்டத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று இந்த நாடுகள் கவலை அடைந்துள்ளன.

இந்நிலையில் இந்த அணையை பாதுகாக்க தயாராக இருப்பதாக எத்தியோப்பிய விமானப்படை ஒரு வாரத்திற்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது.

“அணையை பாதுகாப்பதற்காக அனைத்து விமானங்களுக்கும் தடை விதிக்கப்படுகின்றன” என்று எத்தியோப்பிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் வெசன்யெலே ஹனெக்னோ கடந்த திங்கட்கிழமை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்த அணை தொடர்பில் எகிப்து மற்றும் சூடானுடன் இணக்கம் ஒன்றுக்கு வராத நிலையிலேயே எத்தியோப்பியா கடந்த ஜூலையில் அணையில் நீர் நிரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment